September 4, 2018
தண்டோரா குழு
பாஜக – ஆர்.எஸ்.எஸ் ஃபாசிஸ ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டு, கைதாகிவிடுதலையான சோபியா சோபியாவிடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,நேற்று சென்னையிலிருந்துதூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.அப்போது அவர் பயணித்த விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி,‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்டு அவரிடம் பிரச்சனை செய்தார்.இதைத் தொடர்ந்து,தூத்துக்குடி விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியதும்,தமிழிசை சௌந்தரராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தமிழிசை அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யபட்டார். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்,15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில்,மாணவி சோபியா கைதிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள்உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து, சோபியா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில், கைதாகி, ஜாமீனில் வெளியாகியிருக்கும் சோபியா என்கிற பெண் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவராக இருக்கலாம் என பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பேசிய சுப்பிரமணிய சுவாமி,
“அந்தப் பெண்மணி யார் என்பது பற்றி விசாரிக்க வேண்டும். அவர் கனடாவைச் சேர்ந்தவராக இருந்தால் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஏனென்றால், கனடாவில் இருக்கும் பல தமிழர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவை வசை பாட பாசிஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். பாஜக ஒரு இந்து கட்சி. இந்துக்கள் தான் பரந்த மனப்பான்மையுடையவர்கள். அவர்களால் பாசிச மனப்பான்மையுடன் இருக்க முடியாது. அந்தப் பெண் விமானத்தில் கோஷமிட்டது விதிமீறலாகும்.எனவே அவரது கைது நியாயமானதுதான்” என்று கூறியுள்ளார்.