• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு

May 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில் குழுத் தலைவர் வி.பி.முபசீரா தலைமையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் 600 சதுரடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம், 1200 சதுரடி பரப்பளவு வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1800 சதுரடி வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1800 சதுரடிக்கு அதிகவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம்.

வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதம்,தொழிற்சாலைகள், சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யலாம்,காலிமனைக்கு 100 சதவீதம் உயர்வு செய்யலாம் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு,வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுவின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் சொத்து வரி உயர்வு தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு, சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் தெரிவித்து, மாநகராட்சி மாமன்ற தீர்மானம் நிறைவேற்றவும் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், மாநராட்சி வருவாய் உதவி கமிஷனர் செந்தில்குமார் ரத்தினம், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க