• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையானார் சசிகலா!

January 27, 2021 தண்டோரா குழு

பெங்களூரு விக்டோரிய மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்து விடுதலைப் பத்திரத்தில் சிறை அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. இவருடன் சொத்துக்குவிப்பு வழக்கில் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டனை காலம் இன்று காலை 10.30மணிக்கு முடிந்தது. இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பெங்களூரு விக்டோரிய மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்து விடுதலைப் பத்திரத்தில் சிறை அதிகாரிகள் கையெழுத்துப்பெற்றனர். எனினும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க