• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் ரயில்வே கோட்டம் அபராதமாக ரூ.14.65 கோடி வசூல் !

March 9, 2023 தண்டோரா குழு

சேலம் ரயில்வே கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வழக்கமான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சோதனைகளின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் நபர்கள், முறையற்ற பயணம், முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ் போன்றவற்றை கண்டறிந்து அதற்கேற்ப அபராதம் விதிக்கின்றனர்.

அதன் படி சேலம் கோட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அபராதமாக ரூ.14 கோடியே 65 லட்சத்து 10 ஆயிரத்து 717 வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் ரூ.9.74 கோடி வசூல் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய தொகையை விட ரூ.4.90 கோடி அதிகமாகும். சதவீதத்தின் அடிப்படையில் 50.33 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு துறை அதிகாரி கூறுகையில்,

‘‘ 2022-23 ஏப்ரல் – பிப்ரவரி மாதங்களில், சேலம் கோட்டத்தின் டிக்கெட் சோதனைக் குழுக்கள் 1,90,202 டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த வழக்குகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளிடமிருந்து அபராதமாக ரூ.13,35,58,969- வசூலித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 14.19 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 40.60 சதவீதம் அதிகமாகும்.

மேலும், 2022-23 ஏப்ரல் – பிப்ரவரி மாதங்களில் 25397 முறைகேடான பயணங்கள் கண்டறியப்பட்டு, பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.1,26,26,990- வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 530.82 சதவீதம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 531.55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில், 507 முன்பதிவு செய்யப்படாத லக்கேஜ்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. இந்த வழக்குகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ரூ.3,24,758 ஆகும்.

53 ஆயிரத்து 598 சோதனைகளில் சேலம் கோட்டத்தின் டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள் இந்த முறைகேடுகளை குற்றங்களைக் கண்டறிந்தனர். இதன் அடிப்படையில் அபராதமாக வசூலித்த மொத்தத் தொகை ரூ.14,65,10,717- ஆகும், இது 2021-22 ஏப்ரல் – பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 50.33 சதவீதம் அதிகமாகும்,’’ என்றார்.

மேலும் படிக்க