• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செயற்கை நுண்ணறிவு – இயந்திர கற்றல் மூலம் இந்தியாவின் மின் வினியோகத் துறையை மேம்படுத்தும் அப்ராவா எனர்ஜி நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது

December 17, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் எரிசக்தி துறையில் அதிநவீன தீர்வுகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான அப்ராவா எனர்ஜி நிறுவனத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மூலம் தரவு அடிப்படையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான எரிசக்தித் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருவதால் மின்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மின் வினியோகத் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டில்’ இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்த இரண்டு நாள் மாநாடு, இந்தியாவில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் முழுவதும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், நுகர்வோர் திருப்தியை அதிகரிக்கவும் உதவும் அதிநவீன பயன்பாட்டு முறைகளை வெளிப்படுத்தியது. புதுடெல்லியில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில், இந்தியாவில் உள்ள மின் வினியோக நிறுவனங்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், செயல்பாட்டுத் திறன்கள், நுகர்வோர் திருப்தியை அதிகரிக்கவும் உதவும் அதிநவீன பயன்பாட்டு முறைகள் குறித்து விரிவாக தெரிவித்தன. இந்த மாநாட்டில் இரண்டாம் பரிசுக்கான விருதை, அப்ராவா எனர்ஜி நிறுவனத்திற்கு மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் வழங்கினார்.

இந்த மாநாட்டில் மின் வினியோக நிறுவனங்கள், நவீன மீட்டரிங் உள்கட்டமைப்பு சேவை வழங்குநர்கள், தொழில்நுட்பத் தீர்வு வழங்குநர்கள் மற்றும் வீட்டு ஆட்டோமேஷன் தீர்வு வழங்குநர்கள் என பல்வேறு நிறுவனங்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட தீர்வுகளை காட்சிப்படுத்தின. இதில் அப்ராவா எனர்ஜி நிறுவனம், ஸ்மார்ட் மீட்டரிங் பிரிவின் கீழ், ஒர்க்ஆன்கிரிட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள டிஸ்காம் ஜிபிடி என்னும் தீர்வை காட்சிப்படுத்தியது.

மேலும் மின்சார தேவையை திறம்பட குறைத்தல், மின்சார செலவுகளைக் குறைத்தல் தொடர்பான தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயல்பாட்டு ஆட்டோமேஷன் ஆகியவை நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்தும் அதே வேளையில், பவர் கிரிட் செயல்திறனையும் எவ்வாறு மேம்படுத்தும் என்பதையும் நிரூபித்தது.

இது இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் எரிசக்தித் துறையில் புத்திசாலித்தனமான முடிவுகள், உடனடித் தீர்வுகள் மற்றும் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் விதமாக செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட இயந்திர கற்றல் மற்றும் வலிமையான தரவு கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், கிரிட் மின் வினியோகத் துறையில் புதிய மாற்றத்தையும், சிறப்பான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையையும் வழங்குகிறது.

இது குறித்து அப்ராவா எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறுகையில்,

கிரிட் என்பது இந்தியாவிற்கான மின் வினியோகத்தின் எதிர்காலத்தை மறுவடிவமைப்பதில் அப்ராவா மேற்கொள்ளும் முயற்சியைக் குறிக்கிறது. இது தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல, மின்சாரப் பயன்பாட்டுச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலை பயன்படுத்துவதற்கான ஒரு துணிச்சலான முடிவாகும். இந்த முன்முயற்சியின் மூலம், மின்கட்டமைப்பின் நம்பகத்தன்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம் ஆகும். எங்களின் இந்த புதிய தீர்வுக்காக மின்சார அமைச்சகத்திடம் இருந்து கிடைத்துள்ள அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்களால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டிற்கு நம்பகமான மற்றும் குறைந்த விலையிலான எரிசக்தி தீர்வுகளை வழங்குவதில் அப்ராவா நிறுவனம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க