• Download mobile app
31 Jan 2026, SaturdayEdition - 3643
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செப்., 1 முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம்

August 22, 2017 தண்டோரா குழு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது,

வரும் செப்டம்பர் 1 முதல் அசல் டிரைவிங் லைசென்ஸ் ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும். வாகன விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விதிமீறல் தொடர்பாக இதுவரை 9,500 லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், அதிக பாரம் ஏற்றி சென்றவர்களின் லைசென்சுகள் அதிகளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும்,தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறந்ததாக உள்ளன. சிறந்த சாலைகள் இருப்பதால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. போக்குவரத்து அமைச்சகத்தின் நடவடிக்கை மூலம் 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் பேட்டரி மூலம் ஓடும் பஸ்கள் இயங்கும் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க