• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காவலர்கள் கைது

March 22, 2018 தண்டோரா குழு

சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் நேற்று தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் (மார்ச் 21)புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.

தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றிய போது,சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதனால்,காரணமில்லாமல் தங்களை ராமநாதபுரத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தீ குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேரும் மீதும் மெரினா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதப்படை காவலர்கள் கணேஷ், ரகு ஆகியோர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க