• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற காவலர்களுக்கு ஜாமீன்

March 23, 2018 தண்டோரா குழு

சென்னையில் டிஜிபி அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் கைதான காவலர்களுக்கு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கியது.

தேனி மாவட்டத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் கடந்த(மார்ச் 21)புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.

தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றிய போது,சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.அதனால்,காரணமில்லாமல் தங்களை ராமநாதபுரத்துக்கு பணியிடமாற்றம் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தீ குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேரும் மீதும் மெரினா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது.இதனைத்தொடர்ந்து, விசாரணை முடிவில் இருவரும் எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க