• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர்களே வழிப்பறியில் ஈடுபட்ட அவலம்

August 8, 2017 தண்டோரா குழு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு காத்திருப்பு அறையில் ரயிலுக்காகக் காத்திருந்தார். அப்போது தமிழ்நாடு சிறப்புப் படை காவலர்கள் இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகிய மூவரும் அவரை மிரட்டி அடித்து அவரிடம் இருந்து பணமும், செல்போனும் பறித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே ரயில் நிலைய காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணி புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த 3 காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதன் பின் வழிப்பறி செய்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க