• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் இடைத்தேர்தல்:தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல்

April 26, 2019 தண்டோரா குழு

சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சுயேட்சைகளும் தொடர்ந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சூலூர் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் அவர் தனது மனுவை வழங்கினார். அப்போது, தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு, ஆதிபேரவை நிறுவனர் அதியமான், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பிரிமியர் செல்வம், சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன், தி.மு.க. பிரமுகர் மன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றேன். தி.மு.க. சூலூர் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும்,” என்றார்.

மேலும் படிக்க