• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் அருகே டாக்ஸி டிரைவரை கத்தியால் குத்திவிட்டு கார் கடத்தல்

August 21, 2019 தண்டோரா குழு

சூலூர் அருகே இன்று அதிகாலை ரெட் டாக்ஸி டிரைவரை கத்தியால் குத்திவிட்டு காரை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் இடையன் வலசு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார். இவர் கோவையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை செல்வதற்காக இரண்டு பேர் வசந்தகுமாரை அணுகி பின்னர் சிங்காநல்லூரில் இருந்து மதுரை சென்றுகொண்டிருந்தனர். கார் கோவை மாவட்டம் சூலூர் அருகே வரும்போது பின்னால் அமர்ந்திருந்த இருவர் திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்தி காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றனர்.

இதனை அடுத்து வசந்தகுமார் சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து கோவை மாவட்ட எல்லை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் உசார் படுத்தப்பட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரை ஓட்டிக்கொண்டு வந்த இருவரையும் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடவே மற்றொருவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். இதனை எடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் கொங்கு சாமி என்பதும் உடன் வந்த மற்றொருவர் திருமுருகன் என்பதும் தெரியவந்தது மேலும் இவர்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து திருமுருகனை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கொங்குசாமியை தேடி வருகின்றனர்.

மேலும் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து திருமுருகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வசந்தகுமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க