• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாட்கள் பிரச்சாரம்

May 4, 2019

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் இரண்டு நாட்கள் சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று இரவு கோவை வரும் அவர், நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர், மாலை 5 மணிக்கு தென்னம்பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும், மாலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரச்சாரம் செய்கிறார்.

நாளை இரவு கோவையில் உள்ள லி மெரிடியன் ஓட்டலில் தங்குகிறார். பின்னர், நாளை மறுநாள் 2-வது நாள் பிரச்சாரமாக, அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் பிரசாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின், சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார்.

மேலும் படிக்க