• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் ஒரு கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் பறிமுதல்

May 10, 2019 தண்டோரா குழு

சூலூரில் வியாழக்கிழமை பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ 1 கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

சூலூர் வேளாண்மை பல்கலைக்கழக வரைகலை அதிகாரி ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும்படை யைச்சேர்ந்த அதிகாரிகள் சூலூர் அருகே சோளக்காட்டுப்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதில் ரூபாய் ஒரு கோடியே 98 லட்சத்து 6400 ரூபாய் இருந்தது தெரியவந்தது. இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம்பாளையம் ஏ.டி.எம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த வேனில் வந்தவர்கள் கூறினர்.

எனினும் உரிய ஆவணங்கள்
இன்றி கொண்டு செல்லப்பட்டதால் அதனை பறிமுதல் செய்து சூலூர் தேர்தல் நடத்தம் அலுவலர் எஸ்.பாலகிருஸ்ணன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் ஜெயராஜிடம் ஒப்படைக்கப்படைத்தனர்.

பின்னர் இதனை பறிமுதல் செய்து சூலூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க