• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுற்றுசூழல் தாக்க மதீப்பீடு வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

July 31, 2020 தண்டோரா குழு

சுற்றுசூழல் தாக்க மதீப்பீடு வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 1986 யில் மாற்றம் செய்து புதிய சுற்றுசூழல் கொள்கையை உருவாக்கி சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு -2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் முற்போக்கு இயக்கங்கள் சார்பாக புதிய சட்ட வரைவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்திபுரம் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தினால் சுற்றுசூழலுக்கும் மனிதர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் பெரும் முதலாளிகள் பயன்பெறும் வகையில் இருப்பதுடன் இந்த வித அனுமதியும் பெறாமல் தொழிற்சாலைகள்,சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செய்ய வழி வகுக்கும் எனவும் குற்றம்சாட்டினர். எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க