June 14, 2025
தண்டோரா குழு
கோவை திருச்சி ரோடு சுந்தரேசன் லே-அவுட் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் அவர்களின் மனைவியான சுந்தரி கடந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.
இவர் KCP infra நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவரும் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்க செயலாளருமான KCP சந்திர பிரகாஷ் அவர்களின் தாயார் ஆவார்.
சுந்தரி கிருஷ்ணகுமார் மறைவிற்கு உறவினர்கள், நண்பர்கள், தொழில் நிறுவனத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சுந்தரேசன் லே-அவுட் ரெயின்போ பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலி மற்றும் சடங்குகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கே சி பி சந்தர பிரகாஷ், மகள்கள் ராஜேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோர் செய்து வருகின்றனர்.