• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர தினக் கொண்டாட்டம்: கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில் செப்டம்பர் 7 வரை இலவச கண்பரிசோதனை முகாம்

August 11, 2025 தண்டோரா குழு

கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை சார்பில், நாட்டின் 79-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதைத் தவிர, கண் அறுவைச் சிகிச்சைகளுக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 7 வரை நடைபெறும் இலவச கண்பரிசோதனை முகாம் மூலம் பொதுமக்கள் கண் பராமரிப்பை இலவசமாக பெறும் வாய்ப்பை பெறலாம். இவற்றில் கண் மருத்துவப் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளில் 15 சதம் தள்ளுபடியும், லேசிக் சிகிச்சையில் 25 சதம் தள்ளுபடியும் மற்றும் ஆப்டிகல் பிரேம்களில் 25 சதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த இலவச மருத்துவ முகாமில் டாக்டர் மதுசூதன் ஆர்.ஜே. விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் முகமது ஷாபாஸ், கார்னியா மற்றும் ஒளிவிலகல் நிபுணர், டாக்டர் ஏ.எம். மும்தாஜ், கண்புரை அறுவை நிபுணர், டாக்டர் பானுலட்சுமி பொது கண் மருத்துவ நிபுணர் ஆகிய நிபுணர்கள் சேவையளிக்க உள்ளனர்.

கோவை டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை பொதுக் கண் பராமரிப்பு, கண்புரை, குளுகோமா, விழித்திரை, லேசிக், கார்னியா மற்றும் குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சுதந்திர தினத்தில் உங்கள் பார்வைக்கு சுதந்திரம் அளிக்கட்டும் என்ற குறிக்கோளுடன் இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு மற்றும் முன்பதிவிற்காக 77369 05222 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

மேலும் படிக்க