• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 42 வது இடம் பிடித்து கோவை மாணவி சாதனை

May 31, 2022 தண்டோரா குழு

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுவாதி ஸ்ரீ இந்திய அளவில் 42 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஊட்டியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சுவாதி ஸ்ரீ, இளங்கலை அக்ரிகல்சுரல் படிப்பை தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரில் பயின்றுள்ளார்.

வெற்றி பெற்றது குறித்து சுவாதி கூறுகையில்,

மூன்றாவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளதாகவும், இதற்காக சென்னையில் உள்ள தனியார் கோச்சிங் செண்டர்களில் சிறப்பு பயிற்சி எடுத்தாகவும் இதன் கார்ணமாகவே வெற்றி பெற முடிந்தது என தெரிவித்தார்.

மேலும் இதற்கு உதவி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் படிக்க