• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது – டிடிவி தினகரன்

December 14, 2018 தண்டோரா குழு

சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

2006 ஆம் ஆண்டில் இருந்து செந்தில் பாலாஜியை நன்கு தெரியும்.எங்களுடன் நன்றாகத்தான் இருந்தார் செந்தில் பாலாஜி, 4 மாதங்களுக்கு முன் சொந்த பிரச்சினைகள் இருப்பதாக கூறி சென்றார். கஜா புயல் நேரத்தில் நிவாரணப்பொருட்களையும் செந்தில் பாலாஜி அனுப்பி வைத்தார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். எங்களுடன் காரில் வருவதை குறைத்துக் கொண்டார். செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான், யாரையும் இழுத்து வைக்க முடியாது. சொந்தப்பிரச்சினைகளால் ஒதுங்கி இருப்பதாக கூறியவர் திமுகவில் இணைந்து விட்டார்.

எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரவர் சொந்த விருப்பம். செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றதில் வருத்தம் இல்லை. அமமுக கூடாரம் காலியாகவில்லை. அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது. எங்கள் கட்சி நிர்வாகிகளை இழுத்து பலத்தை காட்ட வேண்டிய நிலையில் திமுக உள்ளது. திமுகவின் நிலைமை மிக மோசமாகிவிட்டதை இது காட்டுகிறது. திமுக அந்த அளவிற்கு ஆர்கே நகரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதனால்தான் எங்கள் கட்சி உறுப்பினருக்கு அவ்வளவு மரியாதை அளிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க