• Download mobile app
09 Jun 2026, TuesdayEdition - 3772
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் சசிகலாவுக்குச் சலுகைகள்

February 21, 2017 தண்டோரா குழு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சில சலுகைகள் தரப்பட்டுள்ளன என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

அதில், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார‌ சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசிக்குச் சிறையில் சில சலுகைகள் தரப் பட்டுள்ளன என்று சிறைத் துறை தெரிவித்துள்ளது.

அதையடுத்து சிறையில் ‘பி 2’ பிரிவில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்குத் தொலைக்காட்சி, கட்டில், மின்விசிறி மற்றும் செய்தித்தாள் ஆகியவற்றை வழங்க சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், “வீட்டு உணவு வேண்‌டும்” என்ற சசிகலாவின் கோரிக்கையை சிறை நிர்வாகம் இதுவரை ஏற்கவில்லை.

அதேசமயம், சுதாகரனுக்கு இதுவரை எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று பரப்பன அக்ரஹா‌ரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வருமான வரி ஆவணங்களைத் தாக்கல் செய்த ‌சசிகலா‌ தனக்குச் சிறையில் முதல் வகுப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க