• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் இருந்து தப்பிய கைதி 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிறைக்கு திரும்பிய அதிசியம்

July 20, 2017 தண்டோரா குழு

கேரளாவில் கொலை வழக்கில் சிறையிலிருந்தபொழுது பரோலில் தப்பிய கைதி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சிறைக்கு திரும்பிய சம்பவம் கைதிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள மட்டஞ்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் நாசர். இவர் கொலை குற்ற வழக்கு ஒன்றில் 4 நபர்களோடு குற்றம் சாட்டப்பட்டு 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின் நாசருக்கு 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாதம் பரோல் கிடைத்தது. அப்போது பரோல் காலம் முடிந்து சிறைக்கு திரும்பாமல் தப்பித்துச் செல்ல திட்டமிட்ட நாசர் வளைகுடா நாடு ஒன்றுக்கு தப்பிச்சென்று அங்கே சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திருமணமே செய்துகொள்ளாத நாசர், தனக்கு கேன்சர் நோய் இருப்பதை உணர்ந்து 5 வருடங்களுக்கு முன்பு கேரளா திரும்பி யுள்ளார். கேரளாவில் தங்கி இருந்து சில சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நாசர் இனிமேலும் தனது குடும்பத்திற்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

இதைடுத்து, மீண்டும் சிறைக்கே சென்றுவிடுவது என்று முடிவெடுத்த நாசர் நேற்று மாலை பூஜப்புரா மத்திய சிறை சென்ற அவர் தான் யார் என்பதை தெரிவித்துள்ளார். அப்போது முதலில் ஆச்சரியத்துக்கு உள்ளான சிறைத்துறை அதிகாரிகள், ஆவணங்களை சோதனை செய்த பின்னர் அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

பரோலில் தப்பிய கைதி 25ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அங்குள்ள சக கைதிகளுக்கு மத்தியில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க