• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அணை நீர் மட்டம் 40.80 அடியாக சரிவு

December 18, 2020 தண்டோரா குழு

கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 40.80 அடியாக சரிந்துள்ளது.

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும், நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.

சிறுவாணி அணை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 45 அடி வரை உயர்ந்தது. இதனிடையே தற்போது மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 40.80 அடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி சார்பாக அணையிலிருந்து 97 எம்.எல்.டி நீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 88 எம்.எல்.டி நீர் மட்டுமே குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க