• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைவு – கோவை மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தல்

February 5, 2019 தண்டோரா குழு

கோவையின் மிக முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 26.6 அடியாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை தொடரில், கேரள வனப்பகுதியில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக பெய்ததால் நவம்பர் மாதம் அணை நிரம்பியது. ஆனால் வானிலை மையம் கணித்தபடி வடகிழக்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இருப்பினும், தினமும் எட்டு கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு கோவை மாநகரப் பகுதியில் 33 வார்டுகளில் வசிப்போருக்கும், வழியோர கிராம மக்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 50 அடியாக உள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி 26.60 அடியாக இருந்தது.

கோடை வெயில் அதிகரிக்கும் சூழலில், அணையில் தேங்கியுள்ள தண்ணீர் ஆவியாவது அதிகரிக்க துவங்கும் சூழல் இருப்பதால் நீர்மட்டம் இன்னும் வேகமாக குறைய துவங்கும் என்பதால், பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க