• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமியை துன்புறுத்திய விவகாரம்: நடிகை பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலத்துறை பரிந்துரை

January 30, 2019 தண்டோரா குழு

சிறுமியை துன்புறுத்திய விவகாரத்தில், நடிகை பானுபிரியா மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு அம்மாநில குழந்தைகள் நலத்துறை பரிந்துரை செய்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை பானுபிரியாவின் வீட்டில், ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக வீட்டு வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், சிறுமியின் தாய் நடிகை பானுப்ரியா தன் அடித்து துன்புறுத்துவதாகவும், சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் நடிகை பானுப்ரியா மீது புகாரளித்தார். இதுமட்டுமின்றி பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக
தொந்தரவு தருகிறார் எனவும் அவரது தாயார் புகாரளித்தார்.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பானுப்ரியாவின் வீட்டில் இருந்த அந்த சிறுமியை அன்று மீட்டனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 14 வயது சிறுமியை வீட்டில் பணியில் அமர்த்தி கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சாமல்கோடா போலீசார் நடிகை பானுபிரியா மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்ரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலவாரியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் டிஜிபிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க