September 9, 2020
தண்டோரா குழு
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் விஜயன் வயது 42.இவர் கோவை கணபதி அருகே மணிகாரம்பாளையம் நேரு நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் சோலார் கம்பெனியின் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் விஜயன் வீட்டுக்கு
பக்கத்துக்கு வீட்டு 15 வயது சிறுமி
விளையாட சென்றுள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கு விஜயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.இதுகுறித்து கோவை புலியகுளத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.புகாரின் பேரில் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.