• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

August 26, 2020 தண்டோரா குழு

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 17 வயது சிறுவனைபோலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.

கோவை பீளமேடு பகுதி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுவனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைந்தனர்.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாகவும் சிறுவன் காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்ததாக தெரிவித்தனர்.இருவரது வீடுகளும் அருகருகே உள்ள நிலையில் சம்பவதன்று சிறுவன் சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறினர்.இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க