• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகனுக்கு “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” விருது

February 10, 2023 தண்டோரா குழு

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” பிரிவின் கீழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.ஒரு சான்றிதழுடன் அவருக்கு ரூ.10லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

இது குறித்து சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில்,

சிறுதுளியின் முக்கிய தூண்கள் நீர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு,கழிவு மேலாண்மை, விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துதல்.நீர் மேலாண்மை – Water Watch -குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருதல், தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் உருவாக்குதல், புதிய குளங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 17 ஏரிகள், 20 குளங்கள், 7 ஊடுநீர் குளங்கள், 30 ஓடைகள் மற்றும் 10 தடுப்பணைகள் மூலம் 86 லட்சம் கன மீட்டருக்கு மேல் சேமிப்பு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இப்பகுதியில் 800 க்கும் மேற்பட்ட மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை அமைப்பதின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.இப்பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பெற்று வானவிலங்குகள் நன்மை பயன் பெரும் வகையில் உள்ளன. காடு வளர்ப்பு –Green Guard 7 லட்சம்மரங்களைக் கொண்ட இடைவெளி மற்றும் அடர்த்தியான மியாவாக்கி தோட்டங்கள் நடப்பட்டு உள்ளன. இதன் விளைவகா தோட்டங்களின் பல்லுயிர் பெருக்கம் குறிப்பிடதக்க வகையில் ஏற்பட்டு உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகவளாகம், பாரதியார் பல்கலைக்கழக வளாகம்,CRPF, போத்தனூர், சிங்காநல்லூர், துடியலூர், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான நிலங்கள்,பேரூர் செட்டிபாளையம் மற்றும் பீடம்பள்ளி போன்ற பல பஞ்சாயத்து நிலங்கள் குறிப்பிடத்தக்கவை.

இதன் விளைவாக, தோட்டத்தளங்களின் பல்லுயிர் பெருக்கம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தபட்டுயுள்ளன பசுமைவெளி உருவாக்கும் நடவடிக்கையின் சமீபத்திய முயற்சி மாடிவனத்தை உருவாக்குவது.மொட்டைமாடியில் தொட்டில்களில் மரங்களை வளர்ப்பதினால், கதிர் வீச்சினால் ஏற்படும் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. எங்கள் விழிப்புணர்வு முயற்சிகள் மூலம், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

சிறுதுளி இப்போது கோவை மாவட்ட எல்லையைத்தாண்டி புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கைமாவட்டம்,ஈரோடு,கரூர்,கடலூர்,சென்னைபோன்ற இடங்களில் நீர்சேமிப்புப்பணிகளைத் தொடங்கியுள்ளது.சிறுதுளியின் பல்வேறுதிட்டங்கள்,தன்னார்வ வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் பற்றிய போதுமான தகவல்களை வழங்கும் புனரமைக்கப்பட்ட இணையதளம் சமீபத்தில்தொடங்கப்பட்டது.இனி, வரும் காலகட்டத்தில் நிலத்தடி நீரின் தரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

நீர்நிலைகளில் விடப்படும் கழிவுநீர், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், நல்ல மழைநீரையும் மாசுபடுத்தி, நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பெறப்பட்ட இந்த வெகுமதித் தொகையான ரூ.10 லட்சம், வன எல்லைக்கு மிக அருகில் உள்ள நரசீபுரம் பகுதியில் நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.அப்பகுதியில் உள்ள பல தடுப்பு அணைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளை தூர்வாருவதுடன், புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என நம்புகிறோம் என்றார்.

மேலும் படிக்க