• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சின்னத்தம்பி யானையை மீண்டும் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கிளம்பிய கும்கி

February 2, 2019 தண்டோரா குழு

சின்னத்தம்பி யானையை மீண்டும் பிடிக்க டாப்சிலிப்பில் இருந்து கும்கி கலீம் வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த பெரிய தாடகம் பகுதியில் இருந்து சின்னதம்பி என்ற காட்டு யானையை வனத்துறையினர் கடந்த 25ம் தேதி பிடித்தனர். பின்னர் வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில், சின்னத்தம்பி காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்துள்ளது. கடந்த இரு தினங்களாக பொள்ளாச்சி பகுதியில் சுற்றி வந்த இந்த யானை தற்போது உடுமைலையை சுற்றியுள்ள பகுதியில் சுற்றி வருகிறது. இதனையடுத்து, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றவுள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். இதையடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி யானை சென்றது. அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை சோர்வில் தரையில் படுத்தது. இதனால் யானை மயக்கம் அடைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் யானை நடக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில். உடுமலை அருகே மைவாடி பகுதியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டியுள்ளனர். இதற்காக டாப்சிலிப்பில் இருந்து கும்கி கலீம் வரவழைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க