• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிங்காநல்லூர் சாலையில் 5 கே கார் கேர் 64வது கிளை திறப்பு !

April 9, 2021 தண்டோரா குழு

கோவை ஹோப்ஸ் கல்லூரியிலிருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் 5கே கார் கேர் 64வது மையத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

இதனை நடிகர் ரியோ மற்றும் 5 கே கார் கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடிகர் ரியோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

மே 1 ஒன்றுக்குள் ஒருலட்சம் கார்களுக்கு சனிடைசர் செய்து கோவிட்டில் இருந்து பாதுகாப்பு தருவது என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொன்றிருக்கிறார்கள். மேலும், 2000 இளைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதை ஊக்குவிக்கும் வகையில் இவர்களுடன் நான் பயணிக்கிறேன். இந்த ஆண்டுக்குள் 100 கிளைகளை தொடங்கவுள்ளதாக இருக்கிறார்கள். இதனால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விசயம் என்றார்.

பின்னர் 5 கே கார் கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் கார்த்திக்குமார் சின்னராஜ் கூறுகையில்,

2012 முதல் 5 கே கார் கேர் 64 கிளைகளுடன், 12 லட்சம் வாடிக்கையாளர்கள், இரண்டாயிரம் பணியாளர்களுடன் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வெற்றிகரமாக கார் சர்வீஸ்களை அளித்து கொண்டிருக்கிறோம்.கார் கேர் மையத்தில் 65 க்கும் மேற்பட்ட சேவைகளை அளித்து வருகிறோம். சிங்காநல்லூரில் 64 வது கிளை மூலம் கார் சர்வீஸ்களை அளிக்க உள்ளோம் என்றார்.

பேட்டியின்போது 5 கே கார் கேர் சிங்காநல்லூர் கிளையின் உரிமையாளர் பிரபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க