• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிகிச்சை முடிந்து திமுக தலைவர் கருணாநிதி வீடு திரும்பினார்

August 16, 2017 தண்டோரா குழு

காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்து வீடு திருப்பினார்.

கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவுக் காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

இந்நிலையில் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் மருத்துவ பரிசோதனை முடிந்து அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள உணவுக்குழாய் மாற்றப்பட்டது.

சிகிச்சை முடிந்ததும் கருணாநிதி உடனே வீடு திரும்பினார். சிகிச்சை சிறப்பாக முடிந்தது எனவும் அவர் தற்போது நலமாக உள்ளார் எனவும் திமுக தரப்பிலும், மருத்துவமனை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க