• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிஎஸ்கே அணி ரசிகர்களுக்காக சிறப்பு கடிகாரங்கள் அறிமுகம்

September 19, 2020 தண்டோரா குழு

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் தொடக்கத்தையும், தங்களுக்குப் பிடித்த வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடுவதை ரசிப்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், ‘ஒருமுறை ரசிகர், எப்போதும் ரசிகர்’ என்ற உணர்வைக் கொண்டாடும் விதமாக கடிகாரங்களின் தொகுப்பை அறிமுகம் செய்து சொனாட்டா நிறுவனம் ஒரு மிகப் பெரிய ரசனையை ஏற்படுத்தி தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் கைக்கடிகார பிராண்டான சொனாட்டா, சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான அதன் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயல்பாட்டின் இரண்டாவது பதிப்பாக சொனாட்டா “சிஎஸ்கே 2020 தொகுப்பு” என்ற சிறப்புக் கடிகாரத் தொகுப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த பிரத்யேகமான கடிகாரத் தொகுப்பு ‘விசில்போடு படை’யின் அன்பைக் கொண்டாடுவதுடன் ரசிகர்களுக்காக பிரத்யேகமான கடிகாரங்கள் மற்றும் நவீனத் தன்மையுடன் கூடியதான ஸ்மார்ட் அணிதல் வகைகளை வழங்குகிறது.

சொனாட்டா-சிஎஸ்கே கூட்டணியில், இந்த ஐபிஎல் 2020 தொடரின் போது சிஎஸ்கே ரசிகர்களின் உணர்ச்சிகரமான பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க சொனாட்டா பிராண்ட் விரும்புகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்புக் கடிகாரத் தொகுப்பில் கம்பீரமான, துடிப்பான வடிவமைப்புகள் மற்றும் சிஎஸ்கே வண்ணங்களைக் கொண்ட கடிகாரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை மைதான உணர்வுத் தன்மை எனப்படும் ஸ்டேடியம் ஃபேஷனுக்கான சிறந்த துணையாக இருக்கும் என்பதோடு தாயகத்திலிருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு சிறந்த துணைத் தன்மையை வழங்கும்.

இது தொடர்பாகப் பேசிய, டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் சொனாட்டா தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் சுபிஷ் சுதாகரன் கூறுகையில்,

“அனைத்து ஐபிஎல் அணிகளும் உணர்ச்சிகரமான ரசிகர்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாட்டிலும் மற்றும் நாடு முழுவதும் மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் எங்கள் முதல் கடிகாரத் தொகுப்புக்கு நாடு முழுவதும் இருந்து ஒரு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் கிரிக்கெட் மீதான அன்புக்கு எல்லைகள் எதுவும் இல்லை. தற்போது இந்த ஆண்டு சொனாட்டா சிஎஸ்கே 2020 பதிப்பில், நாங்கள் புதிய வகைக் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது மட்டுமல்லாமல், கிரிக்கெட் விளையாட்டு, அணி மற்றும் ‘ஒரு முறை ரசிகரானால், எப்போதுமே ரசிகர்’ என்ற உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான வழியையும் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்.” என்றார்,

சொனாட்டா – சிஎஸ்கே 2.0 தொகுப்பில் அனைத்தும் புதிய தன்மை கொண்ட டிஜிட்டல், அனா-டிஜி என இரண்டும் சேர்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளன, அத்துடன் சொனாட்டா ‘ஸ்ட்ரைடு ப்ரோ’ என்ற கலப்புத் தன்மை கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரமும் இந்தத் தொகுப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபிட்னஸ் டிராக்கர் எனப்படும் கட்டுடல் கண்காணிப்பு அமைப்பு, கால் அலெர்ட்ஸ் எனப்படும் அழைப்புகள் குறித்த அறிவிப்புத் தகவல்கள், செடண்டரி ரிமைண்டர் எனப்படும் நகர்தலுக்கான நினைவூட்டல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அலாரம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பு முதன்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கடிகாரங்களையும் கொண்டுள்ளது. இதனால் அனைத்து சிஎஸ்கே (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரசிகர்களுக்குமான ஒரு கடிகாரமாக இது அமைந்துள்ளது. இந்தத் தொகுப்பில் 10 வகை கடிகாரங்கள் உள்ளன.

https://www.sonatawatches.in/shop/cskin என்ற இணையதளத்தின் வாயிலாக இவை விற்பனைக்கு கிடைக்கும்.இதன் விலை வரம்பு ரூ. 499 முதல் ரூ. 3,495 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.sonatawatches.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க