• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலை போக்குவரத்து வாரத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி

January 21, 2020

கோவையில் 31வது சாலை போக்குவரத்து வாரத்தினை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக கல்லூரி மாணவர்கள் சென்றனர்.

31வது சாலை போக்குவரத்து வார விழாவானது, தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை வ ஊ சி மைதானத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதனை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 600கும் மேற்பட்ட கல்லுரி மாணவர்கள் வ ஊ சி மைதானத்தில் இருந்து துவங்கி அவினாசி சாலை,குப்புசாமி மருத்துவமனை, வழியாக சென்று மகளிர் தொழில்நுட்ப கல்லூரி,காந்திபுரம் வழியாக மீண்டும்
வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், தங்கள் கைகளில் சாலைகளில் சாகசம் வேண்டாம்,மித வேகம் மிக நன்று,தலை கவசம் உயிர் கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில் காவல்துறையினர்,அதி விரைவு படைவீரர்கள், ,அனைதிந்தியசுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், ,மாநகர குற்றபிரிவு துனை ஆணையர் உமா,,மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல்,தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க