• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் சிறப்பு தனிப்பிரிவு தொடக்கம்

August 7, 2017 தண்டோரா குழு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க மதுரையில் சிறப்பு தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த தனிப்பிரிவு செயல்படும்.

கலப்பு திருமணம் செய்தவர்களை அச்சுறுத்தல், பயமுறுத்தல்,தீங்கு விளைவித்தல் கவுரவ கொலைகள் உள்ளிட்ட அவலங்களிலிருந்து பாதுகாக்க உயர்நீதிமன்ற உத்திரவுப்படி இந்த சிறப்பு பிரிவு மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கலப்பு திருமணம் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நபர்கள் 0452 – 234602 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கலப்பு திருமணம் செய்தவர்களின் புகார்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு விசாரிக்கும். மதுரை மாவட்ட நலத்துறை அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, மாநகர துணை ஆணையர் உள்ளிட்டோர் கண்காணிப்பில் சிறப்பு தனிப்பிரிவு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்பிரிவு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க