• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரி கோவையில் விசிக ஆர்ப்பாட்டம்

July 10, 2019 தண்டோரா குழு

சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும் மேற்கு மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதியாக அறிவிக்க கோரியும் விடுதலை சிறுத்தையின் கட்சியின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை ஏற்றார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆணவ படுகொலைகளை தடுத்த நிறுத்த தவறியதாக மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன்,

மேட்டுப்பாளையம் வர்ஷினிப்ரியா கனகராஜ் படுகொலையில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க