• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச ஜூனியர் மாடல் ஃபேஷன் ஷோ – கோவையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பங்கேற்பு

October 16, 2022 தண்டோரா குழு

கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராணா சிவக்குமார் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டிற்கான
சர்வதேச அளவிலான பேஷன் ஷோ நிகழ்ச்சி விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. இந்த பேஷன் ஷோவில் சிறுவன் ராணா பயிற்சி அளித்த 2 சிறுவர்கள் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து சிறுவன் ரானாவின் தந்தை சிவக்குமார் கூறுகையில்,

துபாயில் வரும் அக்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச அளவிலான பேஷன் ஷோவில் இந்தியா சார்பில் 7 சிறுவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 2 பேர் கோவையில் நானும் ராணாவும் பயிற்சி அளித்த மோஹித் இஷான்(4), திஷான் (6) ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அங்கு 4 சுற்றுகள் நடைபெற உள்ளது. 4 முதல் 6 வயது பிரிவில் பங்கேற்க உள்ளனர்.இதில் வெற்றி பெறுபவர் இந்த ஆண்டிற்கான சர்வதேச ஜூனியர் மாடலாக தேர்ந்தெடுக்கப்படுவார். என தெரிவித்தார்.

மேலும் படிக்க