• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்ச்சைக்குரிய வாசகங்களை அச்சடித்தால் வழக்கு – அச்சக உரிமையாளர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை

February 21, 2019 தண்டோரா குழு

இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அச்சடித்தால் சம்மந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகை வைக்க மாநகராட்சி நிர்வாக, காவல் துறை நிர்வாக, மாவட்ட நிர்வாகம் ஆகிய அலுவலங்கங்களில் அனுமதி பெற வேண்டும். ஆனால் பல்வேறு பகுதிகளில் அனுமதி இல்லாமல், சிலர் விளம்பர பதாகைகள் வைப்பதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பதாகை, ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களில் சர்ச்சைக்குரிய வாசகங்களும் அவ்வப்போது இடம் பெறுகின்றன. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல், மத ரீதியான மோதல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ள சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, காவல் துறை சார்பில் எச்சரிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

அதில் வாடிக்கையாளர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அச்சடிக்க கொடுத்தாலும், அதனை அச்சடித்தால் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க