• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்து வழக்கை விசாரிக்க நீதிபதிகள் அமர்வு அமைப்பு

January 8, 2019 தண்டோரா குழு

அயோத்தி வழக்கை ஜனவரி 10-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று தொடர்பான வழக்கில் அந்த நிலத்தை 3 பாகங்களாக பிரிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற வந்த இந்த வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மீண்டும் வழக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

இதையடுத்து, ஜனவரி மாதம் 4 ஆம் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் அமைக்க வில்லை. நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைத்தவுடன் விசாரிக்கப்படும் எனக்கூறி, இந்த வழக்கை வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இரண்டு நாள் முன்னதாக இன்றே அந்த அமர்வின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி என்.வி.ராமனா, நீதிபதி யூ.யு.லலித் மற்றும் நீதிபதி டி.ஐ.எஸ்.சந்திரச்சுட் ஆகிய நான்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்து வரும் சனவரி 10 ஆம் தேதி விசாரணைக்கு வரும் வழக்கை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க