• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் போஸ்டர் தொடர்பாக நடிகர் விஜய் – முருகதாஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !

July 9, 2018 தண்டோரா குழு

சர்கார் போஸ்டர் தொடர்பாக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் ஜூன் 21ம் தேதி வெளியானது.அந்த போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.இந்த காட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து இந்த போஸ்டர்களை உடனடியாக இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இருந்து நீக்க வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.சுகாதாரத் துறை அறிவுறுத்தலையடுத்து நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நீக்கியது.

இந்நிலையில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைப்பெற்ற போது,நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க