• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன் – காஜல் அகர்வால்

July 25, 2017 தண்டோரா குழு

சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன் என நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரம் ஆந்திர திரையுலகில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் காஜல் அகர்வாலின் தெலுங்கு மானேஜர் ரோனி, அவரது வீட்டில் காஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.
இதனால் காஜல் அகர்வாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து நடிகை காஜல் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,

போதைப் பொருள் விவகாரத்தில் எனது மானேஜர் ரோனி கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடமாட்டேன். ஆதரவும் தெரிவிக்கவும் மாட்டேன். அவர் கைதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சினிமா தொடர்பான என் வேலைகள் முடிந்ததும் அவரிடம் வேறு தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்றார். மேலும், அவரின் மற்ற நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரியாது. என் கேரியர் தொடர்பான விஷயங்களை எனது பெற்றோர் கவனித்து வருவதும் சினிமா துறையினருக்குத் தெரியும்எனக் கூறியுள்ளார்.

தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல்,தற்போது விஜய்யுடன் மெர்சல் படத்திலும் அஜித்துடன் விவேகம் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க