• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு

April 30, 2019 தண்டோரா குழு

எதிர்கட்சி தலைவர் சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்ததார். இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சபாநாயகர் மீது நம்பிக்கையில்ல்லா தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவர் அளித்த மனுவை பேரவை செயலாளரிடம் அளித்தோம். ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க