• Download mobile app
22 Nov 2025, SaturdayEdition - 3573
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சபரிமலை யாத்திரை பாதையில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக ‘ க்யூஆர் -கோடு கொண்ட ‘ விஐ சுரக்‌ஷா’ பாதுகாப்பு கைப்பட்டைகளை வழங்க விஐ நிறுவனம் மீண்டும் கேரளா காவல்துறையுடன் இணைந்துள்ளது

November 22, 2025 தண்டோரா குழு

கேரளாவின் மிகப்பெரிய வருடாந்திர ஆன்மீக யாத்திரைகளில் ஒன்றான சபரிமலை யாத்திரைக்கு மாநிலம் தயாராகி வரும் நிலையில், அங்கு வரும் பக்தர்கள் கவலையில்லாமல் தங்களது குடும்பத்தினருடன் இணைந்திருப்பதையும், பாதுகாப்பான யாத்திரையை மேற்கொள்வதையும் உறுதி செய்வதற்காக கேரளக் காவல் துறையும், கேரளாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான விஐ -யும் (வோடஃபோன் ஐடியா) மீண்டும் கைகோர்த்துள்ளன.

இந்த முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த வோடஃபோன் ஐடியா, கேரளாவின் வணிகத் தலைவர் ஜார்ஜ் மேத்யூ,

சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் போன்ற பகுதிகள் முழுவதும் தொலைத் தொடர்புக்கான இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், யாத்திரை பாதையில் பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்ய விஐ தனது நெட்வொர்க்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் எல்900, எல்1800, எல்2100, எல்2300 மற்றும் எல்2500 ஆகிய ஸ்பெக்ட்ரம் பேண்ட்களில் 70 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை நிறுவியுள்ளதுடன், 13 புதிய தளங்களையும் சேர்த்துள்ளது.

இந்த இடங்களில் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக, பகதர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் யாத்திரையின் போது வலுவான தரவு மற்றும் குரல் சேவைகளை வழங்கும் நோக்கில், மேசிவ் எம்.ஐ.எம்.ஒ. தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட எஃப்டிடி மற்றும் டிடிடி மற்றும் அடுக்குகளை விஐ நிறுவியுள்ளது.விநாயகர் கோவில், நடப்பந்தல், நிர்வாக அலுவலகங்கள், பம்பை-சன்னிதானம் மலையேற்றப் பாதை மற்றும் நிலக்கல் பார்க்கிங் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இணைப்பு கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், பக்தர்களால் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும், தகவல்களைப் பெறவும், தங்கள் ஆன்மீக அனுபவங்களைத் தடையின்றி பகிர்ந்து கொள்ளவும் முடியும். குழந்தைகளுக்கு க்யூஆர் -கோடு கொண்ட பாதுகாப்பு கைப்பட்டைகளை வழங்க விஐ மீண்டும் கேரளா காவல்துறையுடன் இணைந்துள்ளது. ஒவ்வொரு கைப்பட்டையும் ஒரு பாதுகாவலரின் தொடர்பு எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது தொலைந்துபோன குழந்தைகளை விரைவாக அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க காவல்துறையினருக்கு உதவுகிறது.

இந்த ஆண்டு பக்தர்களுக்கு உதவும் வகையில் மிக எளிமையான முன்பதிவு முறையை விஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குடும்பத்தினர் கீழேயுள்ள முகாமை அடைவதற்கு முன்பே பதிவு செய்து கொள்ள முடியும். மேலும், பம்பை முகாமில் உள்ள விஐ சுரக்‌ஷா மையங்களுக்கு வந்தவுடன் பாதுகாப்பு கைப்பட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்:

பெற்றோர்கள்/பாதுகாப்பாக அழைத்து வருபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ‘ விஐ சுரக்‌ஷா’ கைப்பட்டையப் பெற www.visuraksha.online என்ற இணையதளத்தில் உள்நுழைந்து தேவையான தகவல்களை உள்ளீடு செய்யலாம் அல்லது கேரளா முழுவதும் உள்ள ஏதேனும் விஐ ஸ்டோர் அல்லது விஐ மினி ஸ்டோருக்குச் சென்று, தங்கள் யாத்திரையைத் தொடங்கும் முன் டிஜிட்டல் பதிவு ஐடியை பெற்றுக் கொள்ளலாம்.

யாத்திரையின் போது, பெற்றோர்கள் பம்பை முகாமில் உள்ள ஏதேனும் விஐ சுரக்‌ஷா மையத்தில் டிஜிட்டல் பதிவு ஐடியைக் காண்பித்து, ஏற்கனவே தங்கள் தொடர்பு எண்ணுடன் இணைக்கப்பட்ட க்யூஆர் -கோடு கைப்பட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.இந்த வசதி அனைத்து பக்தர்களுக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.பத்தனம்திட்டா மாவட்டக் காவல் அலுவலகத்தில், விஐ கேரளாவின் வணிகத் தலைவர் ஜார்ஜ் மேத்யூ வி முன்னிலையில், பத்தனம்திட்டா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். ஆனந்த் ஆர் ‘ விஐ சுரக்‌ஷா முயற்சிக்கான முன்பதிவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க