• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் என்று தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்

November 17, 2022 தண்டோரா குழு

ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் என்று தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கோவையில் ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பழைய வாகன உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்பவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் பழைய வாகனங்களை உடைத்து உதிரிபாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள், வியாபாரிகள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகன ஒர்க் ஷாப் முதலாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்ய முறையான அனுமதி மற்றும் உரிமம் பெற வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் தாங்கள் பெறும் உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறையு புதுப்பிக்க வேண்டும், மற்றும் பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உடைக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.

அதேபோல கடைக்கு கொண்டுவரப்படும் வாகனங்கள் திருட்டு வாகனங்களாக இருப்பின் அல்லது சந்தேகத்துக்கு இடம் அளிக்கக் கூடிய வாகனங்களாக இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். மேலும் உரிமம் வைத்திருப்பவர் இரண்டாவது முறையாக நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த நபருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு கூட்டத்திற்கு வந்த விற்பனையாளர்கள் காவல்துறையின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் படிக்க