• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்குரு பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

September 3, 2022 தண்டோரா குழு

சத்குரு பிறந்த நாளான செப்டம்பர் 3-ம் தேதி, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சத்குருவின் பிறந்த தினம் இன்று ஈஷா யோகா மையத்திலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மேலும் சத்குருவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.மத்தியபிரதேச முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கமல்நாத், மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, ஷோபா, ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட பலவேறு துறை அமைச்சர்களும், பல்வேறு மாநில அமைச்சர்களும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் திரைத்துறை பிரபலங்களான கங்கனா ரனாவத், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, பாரம்பரிய நடனக்கலைஞர் சோனல் மான்சிங், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

பிரபலங்கள் மட்டுமல்லாமல், ஈஷா தன்னார்வலர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான மக்கள் டிவிட்டரில் #HappyBirthdaySadhguru #RiverRevitalizationDay ஆகிய டேக் உடன் சத்குருவை வாழ்த்தி ட்வீட் செய்தனர். இது தேசிய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டிங் ஆனது.

30 வருடங்களுக்கு முன்பு ஈஷா யோகாவை துவங்கி யோகாவை உடல், மன, ஆன்மீக நலத்திற்கான கருவியாக வெகுஜன மக்களுக்கு தொடர்ந்து கொண்டு சென்று கொண்டிருப்பவர் சத்குரு. மேலும் சமூக பங்களிப்பாக ‘கிராம புத்துணர்வு இயக்கம்’, கிராமப்புற ஏழை குழந்தைகளின் கல்வி மேம்பட ‘ஈஷா வித்யா பள்ளிகள்’, சூழலியல் மேம்பாட்டிற்கென ‘பசுமைக்கரங்கள் இயக்கம்’, உழவர் நலனுக்காகவும், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ‘உழவன் உற்பத்தியாளர் நிறுவனங்கள்’ மற்றும் ‘இயற்கை விவசாய இயக்கம்’, நதிகளை மீட்டெடுக்க ‘நதிகளை மீட்போம்’ மற்றும் ‘காவிரி கூக்குரல் இயக்கம்’ என சத்குருவின் தொலைநோக்குப் பார்வையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமூக நலனுக்கான பல்வேறு திட்டங்களால் உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

சத்குரு தனது ஆன்மீக மற்றும் சமூக பணிகளுக்காக இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதினை கடந்த 2017ம் ஆண்டு பெற்றார். ஒரே நாளில் அதிக மரங்களை நட்டு கின்னஸ் சாதனை, நதிகளை மீட்பதற்கான இந்தியா முழுக்க மிகப்பெரிய விழிப்புணர்வு பயணம், சமீபத்தில் மண் காப்போம் இயக்கத்திற்காக உலக நாடுகளைக் கடந்து 100 நாள் பைக் பயணம் என உலக மக்களின் கவனத்தை சூழலியல் மேம்பாட்டின் பக்கம் திருப்பியவர்.

இவரின் பேச்சுக்களை 100 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்ப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இவர் முன்னெடுத்துள்ள ‘ மண் காப்போம்’ இயக்கம் 300 கோடிக்கும் அதிகமானோரை சென்றடைந்துள்ளது. ஒரு சமூக நலன் சார்ந்த விஷயம் ஒருமித்த குரலுடன் இதனை பெரிய ஆதரவோடு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க