July 19, 2017
தண்டோரா குழு
புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். போன்று கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட புரோ கபடி லீக்கில் 8 அணிகள் பங்கேற்றன. இத்தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஐந்தாவது சீசனில் தமிழகம், அரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்கும் தமிழகத்தின் சென்னை அணியை கிரிக்கெட் வீரர் சச்சின் வாங்கினார்.
இந்நிலையில் தமிழ் தலைவாஸ்’ என பெயரிடப்பட்ட அந்த அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் தமக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ள கமலஹாசன்,’கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்’ என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.