July 21, 2017
தண்டோரா குழு
பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலார் சசிகலாவை சந்திக்க அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“சிறையில் அதிகாரிகள் என்னை காக்க வைத்து பின்னர் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுத்தனர்,” என்றார்.
கடந்த சில நாட்களாகவே பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சகல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார் அதற்கு சிறைத் துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் வழங்கப்பட்டது என முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற காரணங்களினால் தான் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.