• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை: 1 மணி நிலவரப்படி மாநகராட்சி 25% பேரூராட்சி 38% வாக்குகள் பதிவு

February 19, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமிரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி பகுதிகளில் சாதாரண தேர்தல் காலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை ஆய்வு நடத்தி உள்ளோம்.தேர்தல் பார்வையாளர் கோவிந்தராஜ் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் 1290 வாக்குச்சாவடிகளில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை அதில் கண்காணிப்பு கேமரா பொருத்தி நேரலை ஆகவே நாங்கள் ஆய்வு நடத்தி வருகிறோம்.

ஒரு மணி வரை தற்போது 25 சதவீதம் வாக்குகள் மாநகராட்சி பகுதிகளில் பேரூராட்சி பகுதிகளில் 38 சதவீத பதிவாகியுள்ளது. இன்று காலை மின்னணு வாக்கு இயந்திரங்கள் 7 இடங்களில் சிறிய சிறிய பிரச்சனை இருந்தது உடனடியாக அதனை நாங்கள் சரி செய்தோம். சிறிய சிறிய பிரச்சனைகள் சில பகுதிகளில் இருந்தது பறக்கும் படையினர் அங்கு விரைந்து சென்று காவல் துறையினரை அனுப்பி உடனடியாக பிரச்சனைகளை சரி செய்து வாக்காளர்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

ராமநாதபுரம் பகுதியில் ஒரு சில கட்சிகள் மோதல் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அது சம்பந்தமான காவல் நிலையத்தில் புகார் பதிவாகவில்லை புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க