• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க முடிவு

October 25, 2022 தண்டோரா குழு

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தினமும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து சென்றனர்.இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.
இதனால், வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வ.உ.சி பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க பூங்கா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை வ.உ.சி பூங்காவில் உள்ள விலங்குகள் நலமுடன் உள்ளன. அதற்கு தேவையான அனைத்து வகையான உணவுகளும் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. எனினும் விலங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்குவது விலங்குகளின் நலனை மேலும் மேம்படுத்தும்.பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் ஒரு வார காலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் படிக்க