• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

January 3, 2024 தண்டோரா குழு

கோவை மாநகரில் கோவை விழா தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் Healthy Kovai என்ற தலைப்பில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இதில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் மாநகர காவலர்கள் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கோவை விழா நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க