இந்தியாவின் மிகப்பெரிய ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான இந்தியன் ஹோட்டல் நிறுவனமானது, அவிநாசி சாலையில் கோவை விமான நிலையம் அருகில் ஜின்ஜர் ஹோட்டலை திறந்துள்ளது.
இதுகுறித்து ஐ.ஹெச்.இ.எல் நிறுவனத்தின் புதிய வணிகங்கள், ஹோட்டல் திறப்புகள் மற்றும் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் நிர்வாக துணைத் தலைவரான தீபிகா ராவ் கூறுகையில்,
கோயம்புத்தூர் ஒரு ஸ்மார்ட் சிட்டியாக வலுவான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டினைக் கொண்டுள்ளது. இப்படியான நகரத்தில் ஜின்ஜர் ஹோட்டல் துவக்கமென்பது பெரும் மகிழ்ச்சிக்குரியது. மேலும், ஜின்ஜர் ஆனது ஆடம்பரத்தின் அடையாளம். நகர்த்திற்கு வரும் பெரு நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா
பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்.
இந்த 68-கீ ஜிஞ்சர் கோயம்புத்தூர் ஏர்போர்ட் ஹோட்டலானது கோவை விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பது மிகவும் வசதியானதாகும். தவிர, டைடல் பார்க், கோடிசியா வர்த்தக மையம்,ஐடி பார்க் போன்ற முக்கிய வணிக மாவட்டங்களுக்கு அருகாமையில் உள்ளது. இந்த ஹோட்டலில் ஒவ்வொரு நாளுமே சிக்னேச்சர் டின்னர் பரிமாறப்படும். பார், உடற்பயிற்சி மையம் மற்றும் கருத்தரங்கிற்கான பிரத்யேக அரங்கு ஆகியவை அமைந்துள்ளது.
ஐடி துறை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் மேம்பட்ட நகரமாக வளர்ந்துள்ளது கோவை. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் அடுக்கு – 2 நகரங்களில் ஒன்றாகும்.இந்த ஹோட்டல் உடன் சேர்த்து, ஐ.ஹெச். சி.எல். நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் மொத்தம்
18 ஹோட்டல்கள் உள்ளன. மேலும் 2 ஹோட்டல்கள் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்