• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடவள்ளியில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் – போலீசில் புகார்

March 22, 2019 தண்டோரா குழு

கோவை வடவள்ளி இடையர்பாளையம் குடுயிருப்பு அருகே மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கூறி அப்பகுதி குடியிருப்பு மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

கோவை வடவள்ளி இடையர்பாளையம் குடுயிருப்பு அருகே கடந்த பல மாதங்களாக மசாஜ் மற்றும் அழகு நிலையம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடத்தப்படுவதாகவும், அதிகளவு ஆண், பெண்கள் என இரவு நேரங்களில் குடிபோதையில் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பெண்களும், குழந்தைகளும் அதிகளவு நிறைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இம்மாதிரியாக விசயங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க