• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை 1000 பக்தர்களுக்கு அன்னதானம்

October 4, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பணியாற்றி கடந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 99% வரலாற்று வெற்றியை பெற்று தந்தவர் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி‌.

இந்நிலையில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அமலாக்க துறையால் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை பெற்று மீண்டும் தயிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்தனை கொண்டாடும் பொருட்டு கோவையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அசைவ உணவான பிரியாணி வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆலோசனை படி துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீ காந்த் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை செய்து 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல்,4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல்சாமி,5,-வது வார்டு துணை செயலாளர் சுந்தரராஜ், கார்த்திக்,நகர் மற்றும் பகுதி கழக உடன் பொறுப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க